5 வயது குழந்தைக்கும் கட்டாய திருமணம் பிரிட்டனில் அதிர்ச்சி

லண்டன்:

பொருளாதாரம், கல்வியில் வளராத நாடுகளே குழந்தைத் திருமணத்தை ஊக்குவிக்கும் என்பதை பொய்யாக்கி, ஐரோப்பிய நாடான பிரிட்டனிலேயே ஐந்து வயதுக் குழந்தைகள் கூட கட்டாயத் திருமண அபாயத்தை எதிர்கொள்ளவதாக வெளியான தகவல் சர்வதேச அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரிட்டன் உள்துறை அமைச்சகத்திடம் பெறப்பட்ட புதிய தரவுகள் இந்த விவகாரத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளன. அதன்படி, கடந்த 2021 முதல் 2025 வரை, பிரிட்டனின் கட்டாயத் திருமண தடுப்புப் பிரிவுக்கு, 406 புகார்கள் வந்துள்ளன.

இதில் மிகவும் அதிர்ச்சியூட்டும் விஷயம், பாதிக்கப்பட்டோர் பட்டியலில், 5 அல்லது அதற்குக் குறைவான வயதுடைய 27 குழந்தைகளும், 12 வயது அல்லது அதற்குட்பட்ட 100 குழந்தைகளும் இடம்பெற்றுள்ளனர்.

பதிவான வழக்குகளில், 165 பேர் கட்டாயத் திருமணத்திற்காக பாகிஸ்தானுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

பிரிட்டனில் யாரையாவது கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைத்தால், 7 ஆண்டு வரை சிறைத் தண்டனை வழங்கப்படும் கடுமையான சட்டம் அமலில் உள்ளது. அதையும் மீறி குழந்தைத் திருமணம் தொடர்பான தரவுகள் வெளியாகி பிரிட்டன் அரசியலில் தீயை பற்ற வைத்துள்ளது.

Source link