பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு வந்த விஜய்; அண்ணா சாலையில் திரண்ட மக்கள் கூட்டம்

தமிழ்நாடு முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு முதன்முறையாக அரசுமுறைப் பயணமாகப் பிரிட்டன் நாட்டிற்குச் சென்று புதிய தொழில் முதலீடுகளை ஈர்க்க திட்டமிட்டுள்ளார் என்று கூறப்படுகிறது. இந்த மாத இறுதியில் மேற்கொள்ளவிருக்கும் இத்தப்பயணத்திற்காக, உயர்பதவிகளில் இருப்பவர்களுக்கு வழங்கப்படும் டிப்ளமேட்டிக் பாஸ்போர்ட் தொடர்பான பணிகளை மேற்கொள்வதற்காக அவர் இன்று பாஸ்போர்ட் அலுவலகம் வந்துள்ளார்.

முதலமைச்சர் விஜய் வருகை தரும் தகவலை அறிந்ததும், அண்ணா சாலையில் உள்ள பாஸ்போர்ட் அலுவலக வளாகம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஏராளமான பொதுமக்கள், அருகில் உள்ள கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவன ஊழியர்கள் என பலரும் திரண்டனர். வாகனத்தில் இருந்து இறங்கிய முதலமைச்சர் விஜய், அங்கு திரண்டிருந்த மக்களைப் பார்த்து உற்சாகமாகக் கையசைத்தபடி அலுவலகத்திற்குள் சென்றார்.

சர்வதேச அளவில் அதிகாரப்பூர்வ அரசுப் பணிகளை மேற்கொள்ளும் குடியரசுத் தலைவர், பிரதமர், மாநில முதலமைச்சர்கள் போன்ற உயர்மட்டப் பிரதிநிதிகளுக்கு மட்டுமே இந்தச் சிறப்பு மெரூன் வண்ண டிப்ளமேட்டிக் பாஸ்போர்ட் வழங்கப்படுகிறது. வெளிநாட்டுப் பயணங்களின் போது விசா இன்றி பயணிக்கும் வசதி மற்றும் விமான நிலையங்களில் வேகமான சோதனைகள் போன்ற சிறப்பு முன்னுரிமைகள் இந்த பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்குக் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Source link