இந்த விவாதக் கூட்டத்தின் போது, திருப்பூர் வடக்குத் தொகுதி எம்.எல்.ஏ சத்தியபாமா சிறிது நேரம் மாற்று பேரவைத் தலைவராக சபாநாயகர் இருக்கையில் அமர்ந்து அவையை வழி நடத்தினார். தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு பெண், மாற்று பேரவைத் தலைவராக சபாநாயகர் இருக்கையில் அமர்ந்து அவையை வழிநடத்தியது இதுவே முதல் முறையாகும். இந்த வரலாற்று சம்பவத்துக்கு திமுக முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு பாராட்டு தெரிவித்தார்.
இந்த நிலையில், நேற்று (03-09-26) அடுத்த வரலாற்று சம்பவமாக தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு இஸ்லாமியர் சபாநாயகர் இருக்கையில் அமர்ந்து அவையை நடத்தியுள்ளார். சட்டசபையில் நேற்று காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் ஆகிய துறைகளின் மானியக் கோரிக்கை தாக்கல் செய்யப்பட்டு அதன் மீதான விவாதம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் அவையை நடத்தி வந்த நிலையில், திடீரென மதுரை மத்திய தொகுதி தவெக எம்.எல்.ஏ மதார் பதுருதீன் முஸ்தபா மாற்று பேரவைத் தலைவராக சபாநாயகர் இருக்கையில் அமர்ந்து அவையை வழி நடத்தினார்.
