பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்பட்டு வரும் நிலையில், அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.107.77 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.99.55 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும், சிஎன்ஜி காஸ் விலை கிலோகிராமுக்கு ரூ.97.00 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலைகள் இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளன.
-
Sep 06, 2026 07:18 IST
இன்று அதிமுக மாவட்டச் செயலர்கள் கூட்டம்; எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனை
அதிமுக மாவட்டச் செயலர்கள் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், அக்கட்சியின் பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறுகிறது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்டச் செயலர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்துள்ளார்.
-
Sep 06, 2026 07:16 IST
பெட்ரோல் ரூ.107.77; டீசல் ரூ.99.55; இன்றைய விலை நிலவரம் என்ன?
பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்பட்டு வரும் நிலையில், அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.107.77 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.99.55 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும், சிஎன்ஜி காஸ் விலை கிலோகிராமுக்கு ரூ.97.00 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலைகள் இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளன.
-
Sep 06, 2026 07:15 IST
அம்மாபேட்டை அருகே அரசு பேருந்து விபத்து – 15க்கும் மேற்பட்டோர் காயம்
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் இருந்து திருச்சி நோக்கி சென்ற அரசு பேருந்து, தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை நான்குவழிச்சாலை அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த 15க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர்.
-
Sep 06, 2026 07:06 IST
2வது விமான நிலையம் அமைக்க 2 இடங்கள் தேர்வு; முதற்கட்ட ஆய்வுக்கு கடிதம்
சென்னையின் 2வது விமான நிலையம் அமைப்பதற்காக செய்யூர் மற்றும் கும்மிடிப்பூண்டி ஆகிய 2 இடங்களை தவெக அரசு தேர்வு செய்துள்ளது. இந்த 2 தளங்களிலும் முதற்கட்ட சாத்தியக்கூறு ஆய்வு நடத்தக் கோரி இந்திய விமான நிலைய ஆணையத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இதில், செய்யூர் தளம் புதுச்சேரி விமான நிலையத்திலிருந்து சுமார் 40 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
