‘ராஜேந்திர பாலாஜிக்கு பாஸ்போர்ட் வழங்க நீதிமன்றம் உத்தரவு

முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு பாஸ்போர்ட்டை திரும்ப வழங்க ஸ்ரீவில்லிபுத்தூர் முதன்மை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் பண மோசடி செய்ததாக ராஜேந்திர பாலாஜி உள்ளிட்ட 8 பேர் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் இரண்டு வழக்குகளைப் பதிவு செய்திருந்தனர். இந்த வழக்குகளின் விசாரணையின்போது ராஜேந்திர பாலாஜியின் பாஸ்போர்ட் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டிருந்தது.

அதனை மீண்டும் வழங்கக் கோரி அவர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். மனுவை விசாரித்த முதன்மை மாவட்ட நீதிபதி கந்தகுமார், வெளிநாடு செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டால் நீதிமன்றத்தின் முன் அனுமதியைப் பெற வேண்டும் என்ற நிபந்தனையுடன் ராஜேந்திர பாலாஜியின் பாஸ்போர்ட்டை திரும்ப வழங்க உத்தரவிட்டார்.

Source link