ரத்தீஷை அதிகாரிகள் பார்ப்பது, அமைச்சர்கள் பார்ப்பது, ஒரு 10 பேர் உட்கார்ந்து கொண்டு 10 டிபார்ட்மெண்டை பிரித்து வசூல் செய்வது இதெல்லாம் செய்தால் அரசு எப்படி நடக்கும்? ரத்தீஷ் யார்? ரத்தீஷுக்கு அரசியல் தெரியாது, மக்களை பற்றி தெரியாது, மக்கள் கூட ஏதாவது போராட்டங்களில் கலந்து கொண்டிருக்கிறாரா? எதுவும் தெரியாது. மாப்பிள்ளை கூட இருக்கிற 10 பேரும், ரத்தீஷ் கூட இருக்கிற 10 பேரும் அரசையே நடத்திருக்கிறார்கள். இப்படி புறையோடி இருக்கிற அரசை மாற்றுகிறோம் என மக்களிடம் சொல்ல வேண்டியதாக இருக்கிறது. எதற்கு ரத்தீஷ் இன்று தலைமறைவாக இருக்கிறார்? அவர் மேல் ஏன் குற்றச்சாட்டு வருகிறது?
குறிஞ்சி இல்லத்தில் உதயநிதி கூட 24 மணி நேரமும் இருந்த நபர் தான் ரத்தீஷ். அவர் தான் பவர் புரோக்கர். அவர் நான்கு ஐந்து துறையில் வசூல் செய்துக் கொண்டிருந்தார். அவருக்கு லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கிறது. போலீஸ் என்ன செய்ய வேண்டுமோ அதை செய்யும். இந்த 100 நாட்களில் எவ்வளவு செய்ய முடியுமோ அதை முதல்வர் செய்துக் கொண்டிருக்கிறார். ஒவ்வொரு நாளும் கண்ணும் கருத்துமாக மக்களுக்கு என்ன செய்ய வேண்டுமோ அதை செய்துக் கொண்டிருக்கிறார்” என்று கூறினார்.
