ஜெனிவா: டில்லியில் போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது அதீத பலத்தை பயன்படுத்தாமல், பேச்சுவார்த்தை நடத்தியது பயனுள்ள அணுகுமுறை என்ற மனித உரிமைகளுக்கான மனித உரிமை கமிஷனர் வோல்கர் டர்க், இந்தியாவிற்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.
சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் நடந்த ஐநா மனித உரிமை கவுன்சிலின் 63வது கூட்டத்தில் அவர் பேசியதாவது: இந்தியாவில் சமீபத்தில் நடந்த போராட்டமானது, அதீத பலத்தை பிரயோகிப்பதை விட, இளைஞர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதால் சிறந்த தீர்வு கிடைக்கும் என்பதை சுட்டிக் காட்டின.
அமைதியாக போராட்டம் நடத்துவது, பேச்சுரிமை, தகவல்களை அணுகுதல் ஆகியன அரசுக்கும், குடிமக்களுக்கும் இடையே நம்பிக்கையை கட்டமைப்பதில் முக்கியத்துவம் அளிக்கிறது.
ஆனால், பாகிஸ்தானில், போராட்டத்தை ஒடுக்க அதீகப்படியான படையை பயன்படுத்துவதும், சட்டவிரோதமாக கைது செய்யப்படுவதும் நடக்கிறது.ஷின்ஜியாங்கில் உய்கூர் தன்னாட்சி பிராந்தியத்தில் நிலவும் மனித உரிமை சூழல் மிகுந்த கவலை அளிக்கிறது. சீனாவில் திபெத்தியர்களுக்கான வழிபாடு உரிமைகளை கட்டுப்படுத்துவதும், கவலை அளிக்கிறது. அதனை திரும்பப் பெற வேண்டும். இவ்வாறு வோல்கர் துர்க் கூறினார்.
