லண்டன்: தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்க முதல்வர் விஜய் லண்டன் சென்றடைந்தார். விமான நிலையத்தில் பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தமிழகத்துக்கு வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் லண்டனுக்கு பயணம் மேற்கொண்டு உள்ளார்; நேற்று இரவு 10 மணி அளவில் சென்னையில் இருந்து எமிரேட்ஸ் விமானம் மூலம் துபாய் சென்ற முதல்வர், அங்கிருந்து மற்றொரு விமானத்தில் லண்டன் சென்றார்.
லண்டன் விமான நிலையத்தில் பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். லண்டனில் முதலீட்டாளர்கள் சந்திப்பில் பங்கேற்கும் முதல்வர் விஜய், பல்வேறு தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகளைச் சந்தித்து, தமிழகத்தில் தொழில் துவங்க வருமாறு அழைப்பு விடுக்க உள்ளார்.
லண்டனில் உள்ள புகழ்பெற்ற ‘சில்வர்ஸ்டோன் மோட்டார் ரேஸிங் சர்க்யூட்’ வசதிகள் மற்றும் அதற்கான சுற்றுப்பாதையையும் முதல்வர் பார்வையிட உள்ளார். இக்குழு 17ம் தேதி மீண்டும் சென்னை திரும்ப உள்ளது.
இக்குழுவில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி, தொழில்துறை வழிகாட்டி நிறுவன இயக்குனர் தீபக் ஜேக்கப் மற்றும் அரசு அலுவலர்கள் இடம் பெற்றுள்ளனர்.
