ரிலீஸுக்கு ரெடியாகும் ‘மூக்குத்தி அம்மன் 2’

ஆர்.ஜே பாலாஜி – என்.ஜே சரவணன் இயக்கத்தில் கடந்த 2020ஆம் ஆண்டு வெளியான ‘மூக்குத்தி அம்மன்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் தற்போது சுந்தர் சி இயக்கத்தில் உருவாகி வருகிறது. இப்படத்தை முதல் பாகத்தை தயாரித்த வேல்ஸ் நிறுவனமே பிரம்மாண்ட பொருட் செலவில் தயாரிக்க மீண்டும் நயன்தாராவே அம்மனாக நடித்துள்ளார். இவரோடு ரெஜினா கசாண்ட்ரா, கன்னட நடிகர் துனியா விஜய், யோகி பாபு, கருடா ராம், சிங்கம் புலி, அபினயா, அஜய் கோஷ், மைனா நந்தினி, சுவாமிநாதன் ஆகியோர் நடித்துள்ளனர். 

இப்படத்தின் மொத்த படப்பிடிப்பும் கடந்த ஆண்டு டிசம்பரில் நிறைவடைந்தது. பின்பு போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருகிறது. இதையடுத்து பெரிதாக எந்த அப்டேட்டும் இல்லாமல் இருந்த நிலையில் சமீபத்தில் ரெஜினா கசாண்ட்ரா வில்லி கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாகத் தகவல் வெளியாகியிருந்தது. மேலும் வரும் தீபாவளிக்கு படம் வெளியாகும் என ஒரு தகவல் உலா வருகிறது. ஆனால் படக்குழு இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. 

இந்த நிலையில் இப்படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. அதன் ‘ரைஸ் ஆஃப் மகாசக்தி’ எனும் முன்னோட்டம் வருகின்ற 14ஆம் தேதி வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் பட ரிலீஸ் குறித்து அப்டேட் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 



Source link