பெண்கள் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட்டில் இன்று நடைபெறும் இறுதிப்போட்டில் இந்தியா, இலங்கை அணிகள் மோதுகின்றன.
பெண்கள் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட்
10-வது பெண்கள் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் நடந்து வருகிறது. இத்தொடர் கடந்த மாதம் 28-ம் தேதி தொடங்கியது.
இத்தொடரில் குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், தாய்லாந்து, ஹாங்காங் மற்றும் குரூப் பி பிரிவில் இலங்கை, வங்கதேசம், ஐக்கிய அரபு அமீரகம், இந்தோனேசியா என மொத்தம் 8 அணிகள் இடம்பெற்றன.
குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தானும், குரூப் பி பிரிவில் இலங்கை, வங்கதேசமும் அரையிறுதிக்கு முன்னேறின.
இதில் முதல் அரையிறுதி போட்டியில் வங்கதேசத்தை வீழ்த்தி இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. அதேபோல், 2வது அரையிறுதி போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இலங்கை அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இந்தியா – இலங்கை மோதல்
இந்நிலையில், பெண்கள் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்தியா, இலங்கை அணிகள் மோதுகின்றன.
துபாயில் உள்ள துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இந்திய நேரப்படி இன்று இரவு 8 மணிக்கு இந்தப் போட்டி தொடங்குகிறது.
நடப்பு சாம்பியன் ஆன இலங்கை பெண்கள் ஆசிய கோப்பையை தக்கவைக்க தீவிரமாகப் போராடும்.
ஆனால், 7 முறை ஆசிய கோப்பையை வென்றுள்ள இந்திய அணி 8-வது முறையாக கோப்பையை வெல்ல போராடும் என்பதால் இன்றைய ஆட்டத்தில் பரபரப்பிற்கு பஞ்சம் இருக்காது.
