TN Elections 2026 | திடீர் உடல்நலக்குறைவு… நடிகர் மன்சூர் அலி கான் மருத்துவமனையில் அனுமதி

தமிழ்நாடு சட்டசபை தேர்தல் வருகிற 23-ஆம் தேதி நடைபெறுகிறது. தேர்தலை ஒட்டி அரசியல் கட்சிகள் முழு வீச்சில் பரப்புரை செய்து வருகின்றன.

இந்த நிலையில், பரப்புரையின் போது உடல்நலக்குறைவு ஏற்பட்டு வேட்பாளர்கள் சிலர் சிகிச்சை பெற்று வருகின்றனர். முன்னதாக பா.ஜ.க. சார்பில் வானதி ஸ்ரீனிவாசன் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுதவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் மயங்கி விழுந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வருகிறார். இந்த வரிசையில், லால்குடி தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக களமிறங்கி இருக்கும் நடிகர் மன்சூர் அலி கான் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தேர்தல் நெருங்கி வருவதை ஒட்டி கடந்த சில வாரங்களாக லால்குடியில் முகாமிட்டுள்ள மன்சூர் அலி கான் சந்தைக்கு சென்று மக்களை சந்திப்பது, காய்கறி வாங்குவது, பொது மக்கள் வீடுகளுக்கு சென்று அமர்ந்து பேசுவது என தொடர்ச்சியாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தார்.

இந்த நிலையில், நடிகர் மன்சூர் அலி கானுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலி கானுக்கு ஐ.சி.யூ.வில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Source link