புதுடில்லி:டில்லி அருகே உள்ள உத்தர பிரதேசத்தின் காசியாபாதில், நேற்று முன்தினம் நிகழ்ந்த திடீர் தீ விபத்தில், 150 குடிசை வீடுகள் சாம்பலாகின. அந்த இடத்திலிருந்து, 40 நாய்கள், இரண்டு பூனைகள், ‘பெடா’ அமைப்பினரால் மீட்கப்பட்டுள்ளன.
காசியாபாதின் கன்வானி என்ற கிராமம் அருகே உள்ளது, இந்திரபுரம் போலீஸ் ஸ்டேஷன். அந்த போலீஸ் நிலைய எல்லையில், 150 குடிசை வீடுகள் எரிந்து நாசமாகின. அந்த தகவல் கிடைத்ததும், பெடா இந்தியா அமைப்பின் நிர்வாகிகள் அந்த இடத்திற்கு விரைந்தனர்.
எரியும் குடிசை வீடுகளில் இருந்து, 40க்கும் மேற்பட்ட நாய்கள், இரண்டு பூனைகளை பத்திரமாக மீட்டு, முதலுதவி சிகிச்சை அளித்து, பாதுகாப்பான இடங்களில் விடப்பட்டன. அதிக காயம் அடைந்த வீட்டு விலங்குகள், கால்நடை மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
