சிவகங்கை: அரசியல் சாசனம் திருத்த மாட்டார்கள், திருத்துவதற்கான வலிமை கிடையாது என்று நம்பினார்கள். அந்த

சிவகங்கை: அரசியல் சாசனம் திருத்த மாட்டார்கள், திருத்துவதற்கான வலிமை கிடையாது என்று நம்பினார்கள். அந்த நம்பிக்கைக்கு துரோகம் செய்யும் வகையில், இரண்டு ஆண்டுகள் கழித்து எங்கு துணிச்சல் வந்தது என முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் கேள்வி எழுப்பி உள்ளார்.

முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் கூறியதாவது:அரசியல் சாசனத்தை திருத்தக் கூடாது என்றுதான் 2024-ல் தமிழக மக்கள் ஓட்டுப் போட்டனர். 39 இடங்களிலும் திமுக அணியை வெற்றி பெறச் செய்தார்கள். பாஜ அணிக்கு ஒரு இடம் கூட தரவில்லை. இந்த நேரத்தில் அரசியல் சாசனம் திருத்த மாட்டார்கள், திருத்துவதற்கான வலிமை கிடையாது என்று நம்பினார்கள். அந்த நம்பிக்கைக்கு துரோகம் செய்யும் வகையில், இரண்டு ஆண்டுகள் கழித்து எங்கு துணிச்சல் வந்தது, எங்கு தைரியம் வந்தது, அரசியல் சாசனத்தைத் திருத்த முற்பட்டார்கள்.

திமுக தலைமையில் உள்ள மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் 39 எம்பிக்களும் டில்லிக்குச் சென்று இந்த மசோதாவைத் தோற்கடித்திருக்கிறார்கள். இது அரசியல் சாசனம் காப்பாற்றப்பட்டது, அம்பேத்கர் வடித்துத் தந்த அரசியல் சாசனம் காப்பாற்றப்பட்டது. இந்த அரசியல் சாசனம் மட்டும் நிறைவேறி இருந்தால், மேலும் மேலும் அரசியல் சாசனத்தைத் திருத்தியிருப்பார்கள். சிறுபான்மை உரிமைகளைப் பறித்திருப்பார்கள்.அரசியல் சாசனத்தைத் திருத்தாமல் இதையெல்லாம் செய்ய முடியாது. இந்த அரசியல் சாசனத் திருத்தத்தை அனுமதித்திருந்தால், அடுத்து அடுத்து அரசியல் சாசனங்கள் திருத்தப்படும். அதைத் தடுத்தது எம்பிக்களுக்கு பாராட்டுகள்.அரசுக்குத் தோல்வி என்று சொல்ல மாட்டேன். அரசினுடைய துணிச்சலான முயற்சிக்குக் கிடைத்த உண்மையான தோல்வி. அதை வரவேற்கத்தக்க தோல்வி. இவ்வாறு அவர் கூறினார்.

Source link