ஆண்டிபட்டி: ''சட்டசபை தேர்தலில் பாஜவிற்கு துணை செல்லும் அதிமுக விரட்டப்பட வேண்டும்,'' என, ஆண்டிபட்டியில்

ஆண்டிபட்டி: ”சட்டசபை தேர்தலில் பாஜவிற்கு துணை செல்லும் அதிமுக விரட்டப்பட வேண்டும்,” என, ஆண்டிபட்டியில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

ஆண்டிபட்டியில் திமுக வேட்பாளர்களை ஆதரித்து அவர் பேசியதாவது: நம் குரல் லோக்சபாவில் கேட்ககூடாது என சதி செய்துள்ளனர். சில மாநிலங்களில் மத வெறியை வளர்த்து, அதன் மூலம் நாட்டை ஆள பாஜ செய்துள்ள சூழ்ச்சிதான் தொகுதி மறுவரையறை. மேலோட்டமாக பார்த்தால் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறுவது போல் தொகுதிகள் அதிகரிப்பது மாதிரி தெரியும். ஆனால், வரவேண்டிய எண்ணிக்கையை குறைத்துள்ளனர். தொகுதி மறுவரையறை செய்ய தி.மு.க., சார்பில் கருப்பு கொடி கட்டி எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து லோக்சபாவில் எம்பி,பாலு பேசினார்.

ஆனால் லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா, ‘நீங்கள் கருப்பு கொடி ஏற்றினால் என்ன, நீலக்கொடி ஏற்றினால் என்ன’ என ஆணவமாக பேசி உள்ளார். அவர் தமிழகத்தின் உணர்வுகளை அவமதித்துள்ளார். தமிழர்களை அவமதிக்கும் பாஜவின் குரலாக உள்ள சபாநாயகருக்கு கூறுகிறேன். இந்த மண்ணில் திமுக இருக்கும் வரை காவிக்கொடி பறக்காது.

என்டிஏ கூட்டணியால் தமிழகத்திற்கு ஏதாவது நன்மை நடந்துள்ளதா. தமிழகத்திற்கு கெடுதல் செய்ய ஊழல்வாதிகளை மிரட்டி உருவாக்கப்பட்டுள்ள கூட்டணி அது. பிரதமர் மோடியிடம் தமிழகத்திற்கு செய்துள்ள ஒரு சிறப்பு திட்டத்தையாவது கூறுங்கள் என கேட்கிறேன். முதல்வராக இருந்தபோது தமிழகத்தின் உரிமைகளை அடகு வைத்த இபிஎஸ் , இப்போ புலிப்பாண்டியாக மாறி அழுத்தம் தருவாராம்.

தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் வழங்கி திஹார் ஜெயிலுக்கு டூர் போனவர். இபிஎஸ் உடன் கூட்டணி வைத்தால் துாக்கு மாட்டி கொள்வேன் என்றார். தற்போது அவருடன் கூட்டணி வைத்துள்ளார். பாஜவிற்கு பல்லக்கு துாக்கும் இந்த துரோகிகளுக்கு மத்திய அரசு நிதி வழங்காவிட்டாலும், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்களுக்கு எதிரான சட்டங்கள் கொண்டு வந்தாலும் கவலையில்லை. அதிமுக – பாஜவிற்கு விழும் ஓட்டுக்கள் தமிழக வளர்ச்சிக்கு தடைகற்களாகும். டில்லி ரிமோட் கன்ட்ரோலுக்கு ஆடும் அடிமைகள் தமிழகத்தை ஆளக்கூடாது. இந்த தேர்தலில் பாஜவின் ஆணவம், அதிமுகவின் துரோகங்களுக்கு ஒரு சேர முடிவு கட்ட வேண்டும். ஒரு வெற்றி செய்தி வந்துள்ளது. தமிழகத்திற்கு எதிராக கொண்டு வரப்பட்ட தொகுதி மறுவரையறை தீர்மானம் தோற்கடிக்கப்பட்டு வெற்றி பெற்றுள்ளோம். இந்த வெற்றி ‘ட்ரெய்லர்’ தான். இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

Source link