IPL 2026 | பிலிப் சால்ட் அதிரடி: டெல்லி அணி வெற்றிபெற 176 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ஆர்சிபி

நடப்பு ஐ.பி.எல்.தொடரின் 26 வது லீக் போட்டி பெங்களூருவில் இன்று நடக்கிறது. இந்தப் போட்டியில் ஆர்சிபி, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் டெல்லி அணி கேப்டன் அக்சர் படேல் டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்துள்ளார்.

இதையடுத்து, ஆர்சிபி அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் பிலிப் சால்ட் அதிரடியாக ஆடி அரை சதம் கடந்து 63 ரன்னில் அவுட்டானார்.

டிம் டேவிட் 26 ரன் விராட் கோலி 19 ரன், படிக்கல் 18 ரன் எடுத்து அவுட்டாகினர்.

இறுதியில், ஆர்சிபி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் எடுத்துள்ளது.

டெல்லி அணி சார்பில் அக்சர் படேல், குல்தீப் யாதவ், இங்கிடி தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

இதையடுத்து, 176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி களமிறங்குகிறது.

Source link