இவர்களுக்கான குடும்ப சொத்து சம்மந்தமாக பல வருடங்களுக்கு முன்பு பிரிக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த சொத்தில் பங்கு இருப்பதால் ராஜராஜனை அவரது வீட்டில் உள்ளே விடாமல் ராஜபாண்டியன் தொடர்ந்து அச்சிறுத்தியுள்ளார். இதனால் பலமுறை இருவருக்கும் இடையே மோதல்கள் இருந்துள்ளது. இதனிடையே, ராஜராஜன் குடியிருந்த வீட்டை பூட்டி விட்டதால் ராஜராஜன் மனைவி மற்றும் குழந்தைகளுடன் பல நாட்கள் வீட்டு வாசலிலேயே இருந்தவர் கடந்த சில மாதங்களாக அவரது உறவினர் வீட்டில் தங்கி உள்ளார்.
இந்த நிலையில் வீட்டை திறக்க 2 மாதங்களுக்கு முன்பு நீதிமன்றத்தில் உத்தரவு பெற்ற நிலையில் காவல் நிலையத்தில் இருந்த சாவியை பெற அலைந்துள்ளார். நேற்று (02-09-26) போலீசார் சாவி கொடுத்த நிலையில், இன்று வியாழக்கிழமை வீட்டிற்கு வந்த ராஜராஜன் வீட்டை சுத்தம் செய்தார். அப்போது அங்கு வந்த ராஜபாண்டியன், அரிவாள் எடுத்து அவரை விரட்டி வெட்டி உள்ளார். ஒரு வீட்டில் தப்பிக்க பதுங்கிய போது, கத்தியால் குத்தி அருகில் இருந்த சிலிண்டரை தூக்கி தலையில் போட்டு தப்பி சென்றுள்ளார். அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தபோது ராஜராஜன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து கிடக்கிறார்.
சம்பவம் குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். மேலும் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விசாரணை நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது. போலீசாரிடம் பல முறை புகா் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காததால் தான் இந்த படுகொலை நடந்தது என்று கூறி பட்டுக்கோட்டை – புதுக்கோட்டை சாலையில் சாலை மறியலும் நடந்து வருகிறது.
