அப்போது அவர் பேசியதாவது: தற்போதைய மசோதா மகளிருக்கானது அல்ல; 2023-ல் வந்ததே மகளிருக்கான மசோதா. இப்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள மசோதா தேச விரோதமானது. இது தேசத்தின் அரசியல் வரைபடத்தையே மாற்றும் முயற்சி. அதை மகளிர் மசோதா போர்வையில் செய்கிறார்கள். மத்திய அரசின் இந்தச் செய்ல வெட்கக்கேடானது.
பெண்களே நம் நாட்டின் மையப் புள்ளி. இந்த அவையில் உள்ள ஒவ்வொருவரும், தங்கள் வாழ்வில் தாயாக, சகோதரியாக, மனைவியாக உள்ள பெண்களிடமிருந்து ஏதாவது ஒன்றை கற்றுக் கொண்டிருப்பார்கள். நேற்று இந்த அவையில் எனது சகோதரி பிரியங்கா காந்தி பேசியதை எண்ணி நான் பெருமை கொள்கிறேன்.
இந்திய அரசியலில் தற்போது நிகழ்ந்து வரும் மாற்றங்களைக் கண்டு பாஜக பயப்படுகிறது. உண்மை என்பது பல நேரங்களில் இருளில் தான் மறைந்திருக்கிறது. “இருட்டைப் பார்த்து பயப்படக்கூடாது,” என இந்திரா காந்தி கூறியிருக்கிறார். உண்மையைப் பற்றி பேசுவதில் எனக்கு எந்த பயமும் இல்லை.
