உள்ளாட்சி தனி அலுவலர்கள் பதவி: அக்., 19 வரை நீட்டிப்பு

சென்னை: தமிழகத்தில் 28 மாவட்டங்களில், உள்ளாட்சி அமைப்புகளுக்கான, தனி அலுவலர் பதவி காலத்தை, வரும் அக்.,19 வரை நீட்டிப்பதற்கான சட்ட மசோதாவை, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஆனந்த், சட்டசபையில் தாக்கல் செய்தார்.

அந்த மசோதாவில் கூறப்பட்டுள்ளதாவது:

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருநெல்வேலி, தென்காசி தவிர 28 மாவட்டங்களில் உள்ள, கிராம ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள், மாவட்ட ஊராட்சிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் பதவி காலம், 2025ம் ஆண்டு ஜன.,5 தேதி முடிவடைந்தது.

வார்டு எல்லை மறுவரையறை, இட ஒதுக்கீடு பணிகள் நிறைவு பெறாததால், தேர்தல் நடத்தப்படவில்லை. எனவே, தனி அலுவலர்கள் நியமிக்கப்பட்டனர். தற்போது வரை, மறுவரையறை பணிகள் முடியவில்லை.

எனவே, தனி அலுவலர்களின் பதவி காலத்தை, வரும் அக்., 19ம் தேதி வரையிலோ, தேர்தலுக்கு பின், உள்ளாட்சி அமைப்புகளின் முதல் கூட்டம் வரையிலோ நீட்டிக்க, ஊராட்சிகள் சட்டத்தில் திருத்தம் செய்ய, அரசு முடிவு செய்துள்ளது.

இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Source link