கடந்த 5 ஆண்டுகளில் சேஸிங்கில் சி.எஸ்.கே. மிகவும் மோசம்: புள்ளி விவரம் சொல்வது என்ன? | IPL 2026

சென்னை சூப்பர் கிங்ஸ்– சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகளுக்கு இடையிலான போட்டி நேற்று ஐதராபாத்தில் நடைபெற்றது. முதலில் விளையாடிய ஐதராபாத் 194 ரன்கள் சேர்த்தது. பின்னர் 195 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் சி.எஸ்.கே. களம் இறங்கியது. ஒரு கட்டத்தில் பவர்பிளேயில் 3 விக்கெட் இழப்பிற்கு 76 ரன்கள் குவித்திருந்தது. அதன்பின் சிஎஸ்கே-வால் ரன்கள் அடிக்கமுடியவில்லை. இதனால் 184 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது.

2020-க்கும் பிறகு சிஎஸ்கே-வுக்கு சேஸிங் என்றாலே ஜுரம்தான் என்பது தெரியவந்துள்ளது. 2020-ல் இருந்து 18 போட்டிகளில் 175 ரன்களுக்கு மேலான சேஸிங்கை துரத்தியுள்ளார். ஆனால், இதில் 16 முறை சேஸிங் செய்ய முடியாமல் தோல்வியைத்தான் சந்தித்துள்ளது. 2 முறை மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் 175 ரன்களுக்கு மேல் டார்கெட் நிர்ணயித்தால் சி.எஸ்.கே. திணறி வருகிறது என்பது தெளிவாக தெரிகிறது.

Source link