அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் லோகேஷ் கனகராஜ் நாயகனாக நடித்திருந்த ‘டிசி’ படம் கடந்த மாதம் 7ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தில் வாமிகா கபி நாயகியாக நடித்திருக்க சஞ்சனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சன் பிக்சர்ஸ் தயாரித்திருந்த இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார்.
இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக லோகேஷ் கனகராஜின் ஆக்ஷன், வாமிகா கபியின் ஸ்டைனான நடிப்பு மற்றும் அனிருத்தின் இசை பேசு பொருளானது. இதன் விளைவாக வசூலிலும் இப்படம் ரூ.100 கோடி அடித்து அசத்தியது. இதையடுத்து கடந்த 4ஆம் தேதி சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் இப்படம் வெளியானது. அதிலும் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
இந்த நிலையில் இப்படத்தின் வெற்றிக் காரணமாக தயாரிப்பாளர் கலாநிதி மாறன் இயக்குநர் அருண் மாதேஸ்வரன், நாயகன் லோகேஷ் கனகராஜ் மற்றும் இசையமைப்பாளர் அனிருத்துக்கு தலா பிஎம்டபள்யூ காரை பரிசாக அளித்துள்ளார். ஏற்கனவே ஜெயிலர் பட வெற்றிக்கும் ரஜினி,நெல்சனுக்கு கார் பரிசாக வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
Mr. Kalanithi Maran congratulated and presented the keys to brand-new BMW cars to Arun Matheswaran, Lokesh Kanagaraj and Anirudh, for the success of Blockbuster #DC! 💥@Dir_Lokesh@ArunMatheswaran@anirudhofficial#DCMegaBlockbusterpic.twitter.com/QOgmCA6ZqI
— Sun Pictures (@sunpictures) September 10, 2026
