சாதாரண பெண்கள் எம்.பிக்கள் ஆவது ஏன் திமுக, காங்கிரஸுக்கு எரிகிறது. ஏனென்றால் இந்த ஒற்றைக் குடும்பக் கட்சிகள், அதிகாரம் தங்கள் குடும்பத்துக்குள் இருக்க வேண்டும் என விரும்புகிறார்கள். அதற்காகவே இந்த மசோதாவை எதிர்த்தனர்.
தமிழ்நாட்டில் பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை. திமுகவினரை நீங்கள் எங்கே பார்த்தாலும் கேள்வி எழுப்புங்கள். பெண்கள் இடஒதுக்கீடு மசோதாவை ஏன் மறுத்தார்கள் என கேள்வி கேளுங்கள். தமிழ்நாட்டில் ஒரு குடும்பம் மேலும் மேலும் வளமாகின்றன. ஆனால், தமிழகம் மேலும் மேலும் கடனில் தவிக்கிறது.
திமுகவில் ஒரு குடும்பத்துக்குள் யார் அதிகம் கொள்ளையடிப்பது என போட்டி நிலவுவதாக மக்கள் கூறுகிறார்கள். திமுகவில் மகனுக்கும், மருமகனுக்கும் இடையேதான் போட்டி. இருவரில் யார் அதிகம் சொத்து சேர்ப்பது என திமுக குடும்பத்துக்குள் போட்டி” என்று மோடி கூறினார்.
