‘நாளை வினா விடை நேரம் இருக்காது’-சபாநாயகர் அறிவிப்பு

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த ஆகஸ்ட் 5 ஆம் தேதி தொடங்கி பட்ஜெட் தாக்கல், பட்ஜெட் மீதான விவாதம், துறை ரீதியான மானியக் கோரிக்கை என நடைபெற்ற  நிலையில் நாளை (செப்;08) கூட்டத் தொடரின் இறுதி நாளாகும். இந்தநிலையில் நாளை வினா-விடை நேரம் இருக்காது எனப் பேரவையின் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘கூட்டத் தொடரின் இறுதி நாளான நாளை எட்டு துறைகளின் மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெற இருக்கிறது. நாளை வினா-விடை நேரம் இருக்காது. மானிய கோரிக்கை மீதான விவாதத்தை பிற்பகல் 1:30 க்குள் நிறைவு செய்ய வேண்டும். எனவே விரைவாக முடிக்க வேண்டும் என்பதால் கட்சியில் ஒருவருக்கு மட்டுமே பேச அனுமதி தரப்படும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link