பனிச்சரிவின் காரணமாக நேபாளத்தில் ஏற்பட்ட பெரு வெள்ளம், அந்நாட்டையே கதிகலங்க வைத்துவிட்டது. இந்த பெருவெள்ளத்திற்கு, இமய மலைகளில் உள்ள ஏரிகளில்பனிப்பாறைகள்உடைந்து விழுந்தது தான் காரணம் என்று கூறப்படுகிறது. பனிப்பாறைகள் உருகுவதால், பனி மலைகளில் உருவாகும் இந்த ஏரிகளில் அருகில் உள்ள பனிச்சிகரங்கள்உடைந்துவிழும்போது, அந்த ஏரிகள்உடைந்து, அந்த நீர் அருகில் உள்ள ஆற்றில் கலப்பதால் இது போன்ற பெருவெள்ளம் ஏற்படுகிறது. அந்த வகையில் தான் கடந்த வாரம் ஒரு ஏரி உடைந்துகோஷிஆற்றில் ஏற்பட்ட வெள்ளம் நேபாளத்தையே புரட்டிப்போட்டது.
இந்த சம்பவம் மிகப் பெரியபேரிடராகப்பார்க்கப்பட்டாலும், இது வெறும் ஆரம்பம் மட்டும் தான் என்றுஎச்சரிக்கப்படுகிறது. காரணம், இது போன்று ஏராளமான ஏரிகள்இமயமலையில்உள்ளன. இதனால், இந்தஇமயமலையைஒட்டியுள்ள இந்தியா, நேபாளம்,திபெத், சீனா போன்ற நாடுகளுக்கு எப்போதும் பெருவெள்ள ஆபத்து உள்ளது. தற்போது,இமயமலையில்88 ஏரிகள் மிக ஆபத்தான நிலையில் இருப்பதாக வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். இந்நிலையில், இந்த ஆபத்தை எதிர் நோக்கியுள்ள காஷ்மீர்,லடாக், சிக்கிம்,உத்தர்காண்ட்,அருணாசலப்பிரதேசம்மற்றும்இமாச்சல்பிரதேசம் உள்ளிட்ட 6 மாநிலங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த கூட்​டத்​தில், ”பனிச்​சிகர ஏரி​கள் உடைந்தாலோ அல்​லது பனிமலைகள் உடைந்​தாலோ பேரிடர்​கள் ஏற்பட வாய்ப்பு உள்​ளது.இதைத்தடுக்க சம்​பந்​தப்​பட்ட மாநில அரசுகள் தொழில்​நுட்பங்​களை முழு​மை​யாகப் பயன்​படுத்த வேண்​டும். பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகளில் மாவட்ட நிர்வாகம் மிகுந்த விழிப்புடன் இருக்க வேண்டும். இயற்கை பேரிடர் ஏற்பட்டால் உயிர் இழப்பு மற்றும்பொருட்சேதத்தைக்குறைக்க வேண்டும்” என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.நேபாளத்தைத்தொடர்ந்து இந்தியாவிற்கும் பெருவெள்ள ஆபத்து இருப்பதால் ஒன்றிய அரசு மாநிலங்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.