இயக்குநர் மாரி செல்வராஜ் பைசன் காளமாடன் படத்தை தொடர்ந்து ‘மஞ்சணத்தி’ எனும் தலைப்பில் ஒரு படம் இயக்குவதாக அறிவித்தார். இப்படத்தை அவரது மனைவி திவ்யா மாரி செல்வராஜ் ‘நவ்வி ஸ்டூடியோஸ்’ மற்றும் ஃபார்சியூன் எண்டர்டெயின்மெண்ட் தயாரிக்கிறது. இளையராஜா இசையமைக்கிறார். இவருடன் மாரி செல்வராஜ் முதல் முறையாக இணைந்திருப்பது பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கிறது.
இப்படத்தின் அறிவிப்பு கடந்த ஜூனில் சிறு வீடியோவுடன் வெளியானது. அதில் இளையராஜா படத்தின் தலைப்பை கைப்பட எழுதிகொடுத்து வாழ்த்தியிருந்தார். இதையடுத்து இதில் நடிகைகள் பிரியங்கா மோகன் மற்றும் கயாடு லோஹர் இணைந்திருப்பது தெரியவந்தது. ஆனால் படப்பிடிப்பு தொடங்கப்படாமலே இருந்தது. தொடர்ந்து முன் தயாரிப்பு பணிகள் நடந்து வந்தது.
இந்த நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளது. பூஜை விழாவில் படக்குழுவினருடன் இளையராஜாவும் கலந்து கொண்டார். அவரிடம் ஸ்க்ரிப்ட் புத்தகத்தை காண்பித்து மாரி செல்வராஜ் ஆசி பெற்று கொண்டார். இதையடுத்து படப்பிடிப்பினை இளையராஜா கிளாப் அடித்து ஆரம்பித்து வைத்தார். இந்த விழா மூலம் படத்தில் இன்னும் சில நடிகர்கள் இணைந்துள்ளது தெரியவந்துள்ளது. பரியேறும் பெருமாள் கதிர், 29 பட நாயகன் விது, நடன அமைப்பாளர் சாண்டி, பூர்ணிமா ரவி ஆகியோர் நடிக்கின்றனர். விரைவில் அடுத்தடுத்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்ப்பக்கப்படுகிறது.
இளையராஜா தொடங்கி வைத்ததற்காக மாரி செல்வராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், “இன்று முதல் மஞ்சணத்தியின் தினங்களை தொடங்கிவைத்த எங்கள் இசைஞானிக்கு என்றைக்குமான எங்கள் நன்றியும் அன்பும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இன்று முதல் மஞ்சணத்தியின் தினங்களை தொடங்கிவைத்த எங்கள் இசைஞானிக்கு என்றைக்குமான எங்கள் நன்றியும் அன்பும்!! #Manjanathi 🌳💛#Shootbeginstoday@ilaiyaraaja@navvistudios@divyamari@SkandaPictures@Ezhil_DOP@ramu_thangaraj@Editorselva@Kathir@priyankaamohan@11Lohar… pic.twitter.com/1z8EWtO7Fi
— Mari Selvaraj (@mari_selvaraj) September 7, 2026
