ரேவதியின் உறவே வேண்டாம்; அதிரடி முடிவு எடுத்த சாமுண்டீஸ்வரி: கார்த்திகை தீபம் சீரியலில் அடுத்து என்ன?

மகாவை கைது செய்ய வந்த போலீஸ்… திவ்யாவின் உயிரைக் காப்பாற்ற போராடும் திரு! – திருமாங்கல்யம் இன்றைய எபிசோட் அப்டேட்

திருமாங்கல்யம் சீரியல் விறுவிறுப்பான திருப்பங்களுடன் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. நேற்று ஒளிபரப்பான எபிசோடில் திவ்யா உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து இன்றைய எபிசோடில் திவ்யாவின் தற்போதைய நிலைக்கு மகாதான் காரணம் என கோபமடைந்த காஞ்சனா, அவரது கழுத்தைப் பிடித்து வெளியே தள்ள முயற்சிக்கிறார். 

அந்த நேரத்தில் டாக்டர், திவ்யாவின் உயிரைக் காப்பாற்ற ஒரு குறிப்பிட்ட மருந்து உடனடியாக தேவைப்படுவதாகவும், அது கிடைத்தால்தான் சிகிச்சையை தொடர முடியும் என்றும் தெரிவிக்கிறார். இதனால் குடும்பத்தினர் அதிர்ச்சியடைகின்றனர். உடனே திரு, மருந்தை வாங்குவதற்காக அவசரமாக புறப்படுகிறார். ஆனால் வழியில் கௌதமின் ஆட்கள் அவரை தடுத்து நிறுத்தி பிரச்சனை செய்கின்றனர். அவர்களை எதிர்த்து போராடிய திரு, எப்படியோ தேவையான மருந்தை வாங்கி மருத்துவமனை நோக்கி செல்கிறார்.

இதற்கிடையில், மருத்துவமனையிலும் கௌதமின் ஆட்கள் தங்களின் சதித்திட்டத்தை தொடர்கின்றனர். மருத்துவமனையின் மின்சாரத்தை துண்டித்து இருளை உருவாக்கி, திருவை தாக்க முயல்கிறார்கள். ஆனாலும் அவர்களை சமாளித்த திரு, மருந்தை பாதுகாப்பாக டாக்டரிடம் கொண்டு சேர்க்கிறார். இதையடுத்து மருத்துவமனைக்கு போலீசார் வருகை தர, அங்கிருந்தவர்கள் அனைவரும் குழப்பமடைகின்றனர். 

அப்போது காஞ்சனா, “நான்தான் போலீஸை அழைத்தேன். என் மகளுக்கு விஷம் வைத்தது மகாதான். அவரை உடனடியாக கைது செய்யுங்கள்” என்று குற்றம் சாட்டுகிறார். இதைக் கேட்ட அனைவரும் அதிர்ச்சியில் உறைகின்றனர். மகா கைது செய்யப்படுவாரா? திவ்யா உயிர் பிழைப்பாரா? கௌதமின் சதித்திட்டம் அம்பலமாகுமா? என பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 

ரேவதியின் உறவே வேண்டாம்.. அதிரடி முடிவு எடுத்த சாமுண்டீஸ்வரி.. அதிர்ச்சியில் கார்த்திக் – கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்!

கார்த்திகை தீபம் சீரியலின் நேற்றைய எபிசோடில் சாமுண்டீஸ்வரி அனுப்பிய சட்ட நோட்டீஸை பார்த்து கார்த்திக் அதிர்ச்சியடைந்த நிலையில், இன்று என்ன நடக்கப் போகிறது என்று பார்க்கலாம். நோட்டீஸை கையில் எடுத்துக்கொண்டு நேராக சாமுண்டீஸ்வரி வீட்டுக்கு வரும் கார்த்திக், “இது என்ன?” என்று கேள்வி கேட்கிறார். அப்போது சந்திரகலா அந்த நோட்டீஸை வாங்கி வீட்டில் இருந்த அனைவரின் முன்னிலையிலும் வாசித்துக் காட்டுகிறார்.

அதில், சாமுண்டீஸ்வரி தனக்கும் ரேவதிக்கும் இனி எந்த உறவும் இல்லை என்று சட்டப்படி நடவடிக்கை எடுத்திருப்பது தெரியவருகிறது. இதைக் கேட்டு வீட்டில் இருப்பவர்கள் எல்லோரும் அதிர்ச்சியில் உறைந்து போகிறார்கள். ஆனால், இந்த விஷயம் எப்படியும் ரேவதிக்கு தெரியக்கூடாது என்று கார்த்திக் முடிவு செய்கிறார். இருந்தாலும் அவர் நினைத்தது போல நடக்கவில்லை. எதிர்பாராதவிதமாக ரோகிணி, ரேவதியிடம் உண்மையை சொல்லிவிடுகிறார்.

இதனால் மனவேதனையில் ஆழும் ரேவதி, சாமுண்டீஸ்வரியை நேரில் சந்தித்து, “நாளைக்கு வந்து தேவையான இடத்தில் கையெழுத்து போட்டுக் கொடுத்துவிடுகிறேன்” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்புகிறார். அதே நேரத்தில், இவ்வளவு பெரிய விஷயத்தை கார்த்திக் தன்னிடம் மறைத்துவிட்டாரே என்ற வருத்தமும் ரேவதியின் மனதில் ஆழமாக பதிகிறது. சாமுண்டீஸ்வரியின் இந்த முடிவு ரேவதியின் வாழ்க்கையில் என்ன மாற்றத்தை ஏற்படுத்தப் போகிறது? கார்த்திக் மற்றும் ரேவதி இடையே உருவாகும் இந்த விரிசல் அடுத்து என்ன திருப்பத்தை கொடுக்கப் போகிறது? என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 

மீனாட்சியுடன் ரொமான்ஸ்.. கடுப்பான ஆதி, அப்பத்தா எடுக்க போகும் முடிவு என்ன? – வாகை சூடவா இன்றைய எபிசோட் அப்டேட் 

வாகை சூடவா. இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் ஆதி மற்றும் ரம்யா அப்பத்தாவை சந்தித்து பேசிய நிலையில் இன்று, அப்பத்தா அவங்கள இந்த வீட்டுக்கு வந்தா நான் ஏத்துக்க ரெடி என வெறும் வாய் வார்த்தையாக சொல்லி விட்டு வரும்போது பாத்துக்கலாம் என மனதுக்குள் கணக்கு போடுகிறார். 
இதையடுத்து ஆதியும் ரம்யாவும் சுமதி வீட்டுக்கு கிளம்பி வருகின்றனர்.

எப்படியாவது இருவரையும் பேசி அப்பத்தா வீட்டுக்கு அனுப்ப திட்டமிடுகின்றனர். இங்கே ஜீவா கையில் அடிபட்டு இருப்பதால் சட்டை போட முடியாமல் தவிர்ந்து கொண்டிருக்கு சுமதி ரொம்ப கஷ்டப்படுறாரு கொஞ்சம் உதவி பண்ணு என்று சொல்ல மீனாட்சி ஜீவாவுக்கு உதவி செய்ய முடிவு எடுக்கிறாள். அதற்கு முன்பாக கதவு மற்றும் ஜன்னல்களை சாத்திவிட்டு வர ஜீவா எதுக்காக எல்லாத்தையும் க்ளோஸ் பண்ற என்று கேட்க காத்து உள்ளே வரும் முடி பறக்கும்.. அதனால ரொமான்ஸ் சீன் உருவாகும் இதெல்லாம் தேவையா என்று சொல்கிறாள்.

பிறகு ஜீவாவுக்கு சட்டை போட்டு விட்டு மீனாட்சி திரும்பும்போது கால் தடுக்கி கீழே விழப்போக ஜீவா தாங்கி பிடிக்கிறான். அப்போது கதவை திறக்க காற்று உள்ளே வர முடி பறக்க மீனாட்சி சொன்னது போலவே ஒரு ரொமான்ஸ் கிரியேட் ஆகிறது. இந்த சமயத்தில் ஆதி வீட்டுக்குள் நுழைய இருவரும் நெருக்கமாக இருப்பதை பார்த்து மேலும் கடுப்பாகிறான். உடனடியாக ஏதாவது செய்து இருவரையும் பிரிக்க திட்டம் போடுகிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Source link