புதுடில்லி:டில்லி ஆனந்த் விஹார் என்ற இடத்தில் உள்ள கைலாஷ் தீபக் மருத்துவமனையின், ஐந்தாம் மாடிக்கு சென்ற நோயாளி ஒருவர், கீழே குதித்து விடுவதாக மிரட்டினார். அவரிடம் பேச்சு நடத்தி, அவரை கீழே அழைத்து வந்தனர்.
பெயர் குறிப்பிடப்படாத அந்த நோயாளி, நேற்று காலை, 8:00 மணிக்கு, அங்கிருந்த சுவற்றை பிடித்தபடி, மேலே சென்று, ஐந்தாவது மாடியின் சுவர் ஓரத்தில் போய் நின்றபடி, கீழே குதித்து விடுவதாக மிரட்டினார்.
அவர் குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள், மிரட்டிக் கொண்டிருந்த நோயாளியிடம் பேச்சு கொடுத்தனர். ஒரு கட்டத்தில், அவரை அங்கிருந்து நகர்த்தி, கீழே கொண்டு வந்த தீயணைப்பு படையினர், அவரின் கோரிக்கை குறித்து விசாரிக்கின்றனர்.
இந்த களேபரத்தால், அந்த பகுதியில் அரை மணி நேரத்திற்கும் மேலாக பரபரப்பு ஏற்பட்டது.
