“திமுகவின் வாதங்கள் அச்சமூட்டும் செயல்” – மகளிர் இடஒதுக்கீடு மசோதா குறித்து குமாரசாமி கருத்து

இந்த விவாதத்தில் இன்று பேசிய மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவரும் மத்திய அமைச்சரமான எச்.டி.குமாரசாமி, “இந்த மசோதாக்கள் மீதான திமுகவின் வாதங்கள் மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தும் செயல். திமுக முன்வைக்கும் வாதங்கள் தென் மாநிலங்களின் கருத்துக்களைப் பிரதிபலிக்கவில்லை. இந்த மாபெரும் மாற்றத்தைக் கையாள்வதற்கு காங்கிரஸ் கட்சி தயாராக இல்லை. அக்கட்சி மக்களுடனான தொடர்பை இழந்துவிட்டதோடு, இந்த மாற்றத்தை எவ்வாறு எதிர்கொள்வது என்பது தெரியாமல் தவிக்கிறது.

சுயமாகச் சிந்திக்கும் திறனையும், தனக்கென சொந்த வாதங்களை உருவாக்கும் ஆற்றலையும் இழந்துவிட்ட காங்கிரஸ் கட்சி, தற்போது திமுகவின் அரசியல் சொல்லாடல்களின் வழிகாட்டுதலின்படியே செயல்பட்டு வருகிறது. சிறிது காலத்துக்கு முன்பு மு.க.ஸ்டாலினின் தம்பி என்று ராகுல் காந்தி தன்னை அழைத்துக் கொண்டார். ஆனால், தொகுதிப் பங்கீடு தொடர்பான மோதலுக்குப் பிறகு, அந்த ‘அண்ணன்’ தன் ‘தம்பி’ மீது கோபமாக இருப்பது போல் தெரிகிறது. அந்தத் ‘தம்பியோ’, இப்போதும் தன் ‘அண்ணனிடமிருந்து’ சிறிது பாசத்தை எதிர்பார்த்து ஏங்கிக்கொண்டிருக்கிறார்” என்று குறிப்பிட்டார்.

Source link