புதுடில்லி: மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 2 சதவீதம் உயர்த்த பிரதமர் மோடி தலைமையில் நடந்த மத்திய

புதுடில்லி: மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 2 சதவீதம் உயர்த்த பிரதமர் மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

டில்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு நிருபர்களை சந்தித்த மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நிருபர்களிடம் கூறியதாவது:

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 2 சதவீதம் உயர்த்த ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் தற்போது 58 சதவீதம் ஆக உள்ள அகவிலைப்படி, 60 சதவீதம் ஆக உயரும்.

அதேபோல், ஓய்வு பெற்றவர்களுக்கான அகவிலைப்படியும் 2 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. 58 ல் இருந்து 60 ஆக உயர்த்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

கடந்த 2025ம் ஆண்டு மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 3 சதவீதம் 58 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டது.

Source link