சென்னை: தமிழகம் மட்டுமல்ல, நாடு முழுவதும் உள்ள பெண்களுக்கு மிக பெரிய அநீதியை இழைத்துள்ளீர்கள் என்று முதல்வர்

சென்னை: தமிழகம் மட்டுமல்ல, நாடு முழுவதும் உள்ள பெண்களுக்கு மிக பெரிய அநீதியை இழைத்துள்ளீர்கள் என்று முதல்வர் ஸ்டாலின் மீது இபிஎஸ் குற்றம்சாட்டி உள்ளார்.

இதுகுறித்து அவரது பதிவு;

தமது அரசியல் அதிகாரத்தை அதிகரித்துக் கொள்ளவும், நியாயமாக கிடைக்க வேண்டிய கூடுதலான 20 எம்பிக்கள் இடங்களை பெறும் வாய்ப்பையும் தமிழகம் இழந்துவிட்டது. பிரதமர் வழங்கிய 50 சதவீதம் கூடுதல் இடங்களை பெறும் பொன்னான வாய்ப்பை இழந்ததோடு மட்டும் அல்லாமல் முதல்வர் ஸ்டாலின் ஒரு கைப்பாவையாக செயல்பட்டு, முக்கியத்தை உணராமல் கண்மூடித்தனமாக எதிர்த்தீர்கள்.

2011ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் கீழ் தொகுதி மறு வரையறையை செய்திருந்தால் இந்நேரம் தமிழகம், 9 எம்பிக்களை இழந்திருக்கும். இந்த மசோதா மீது முதல்வர் ஸ்டாலின் காட்டிய எதிர்ப்பால் தொகுதி மறுவரையறையானது இனி 2026ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி செய்யப்படும். இதன் மூலம் தமிழகம், அதிக எம்பிக்கள் இடங்களை இழக்க நேரிடும்.

1998ல் வாஜ்பாய் பிரதமராக இருந்த காலத்தில் ஜெயலலிதா மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை கொண்டு வந்தார். அப்போது உங்களின் இண்டி கூட்டணி கட்சிகளே அதை நிறைவேற ஒத்துழைக்காமல் இருந்தன. இம்முறையும், உயரிய நோக்கத்தை மசோதாவை எதிர்த்து சிதைத்துவிட்டீர்கள். இதன் மூலம் தமிழகத்திற்கும், நாடு முழுவதும் உள்ள பெண்களுக்கும் மிக பெரிய அநீதியை இழைத்துவிட்டீர்கள்.

தமிழகத்தின் எதிர்காலத்தை சேதப்படுத்தியதையா? பெண்களுக்கு கிடைக்க வேண்டிய அதிகாரமயமக்கலை சீரழித்ததையா? எதை நீங்கள் (முதல்வர் ஸ்டாலின்) கொண்டாடுகிறீர்கள்?

இவ்வாறு அந்த பதிவில் இபிஎஸ் கூறியுள்ளார்.

Source link