இத்தகைய சித்தரிப்புகள் தேர்தலை அமைதியாக நடத்துவதைத் தடைசெய்து, சட்டம் – ஒழுங்குப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்’ என்று அந்த புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மம்தா பானர்ஜிக்கு எதிராக குற்றவியல் மிரட்டல் விடுத்ததாகவும், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்ததாகவும் ஹிமந்த சர்மா மீது திரிணமூல் காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
இவை தேர்தல் நடத்தை விதிகளை மீறுவதுடன், இரு வேறு குழுக்களிடையே பகைமையை வளர்ப்பது, மத உணர்வுகளைப் புண்படுத்துவது உள்ளிட்ட பிஎன்எஸ் மற்றும் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
