துலீப் டிராபியில் அடுத்தடுத்து அசத்தல்… டெஸ்ட் அணியில் இடம் பிடிக்க வலுவான சூழலை உருவாக்கி வருகிறாரா திலக் வர்மா?

September 2, 2026 ietamil 0

இந்திய அணியின் டி20 கிரிக்கெட்டில் ஏற்கனவே தனது இடத்தை உறுதி செய்துள்ள திலக் வர்மா, தற்போது டெஸ்ட் அணியிலும் இடம்பிடிப்பதற்கான வலுவான போட்டியாளராக உருவெடுத்து வருகிறார். துலீப் டிராபி அரையிறுதியில் வடக்கு மண்டலத்துக்கு எதிராக […]

தி.மு.க-வில் கிளைக் கழகம் முதல் தலைமை வரை சுதந்திரமான- நியாயமான தேர்தல்: நிர்வாகிகள் ஆலோசனையில் ஸ்டாலின் அறிவிப்பு

September 2, 2026 ietamil 0

தி.மு.க-வில் சுதந்திரமான – நேர்மையான தேர்தல் மூலமாகப் புதிய நிர்வாகிகள், இளைஞர்கள் பொறுப்புகளுக்கு வருவார்கள். அதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமைக் கழக பிரதிநிதிகளுடன் காணொலி வழியிலான ஆலோசனைக் […]

அனுபவமே தகுதி; கோண்ட்வானா பல்கலை-யில் ஒருங்கிணைப்பாளர் பணியில் இணைந்த முன்னாள் மாவோயிஸ்ட் தலைவர்

September 2, 2026 ietamil 0

எழுதியவர்: அங்கிதா தேஷ்கர் முன்னாள் சி.பி.ஐ (மாவோயிஸ்ட்) அரசியல் தலைமைக்குழு உறுப்பினரான மல்லோஜுலா வேணுகோபால், கட்சிரோலியில் உள்ள கோண்ட்வானா பல்கலைக்கழகத்தின் கிராமப் பஞ்சாயத்து திறன் மேம்பாடு மற்றும் பயிற்சி மையத்தில் தற்காலிக ஒருங்கிணைப்பாளராக இணைந்துள்ளார். […]

பி.சி ராய் போல கலைஞர் நினைத்திருந்தால் கச்சத் தீவு தாரை வார்ப்பை தடுத்திருக்க முடியும்: சட்டசபையில் நிர்மல் குமார் பேச்சு

September 2, 2026 ietamil 0

கச்சத்தீவு விவகாரத்தில் வழக்குகளைக் காட்டி அப்போதைய தி.மு.க அரசை அப்போதைய ஒன்றிய அரசு மிரட்டிப் பணிய வைத்ததாகவும், கருணாநிதி நினைத்திருந்தால் கச்சத்தீவு தாரைவார்க்கப்படுவதைத் தடுத்திருக்கலாம் என்றும் அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் சட்டப்பேரவையில் பகிரங்கமாகக் […]

No Image

விஜய் பேசுவது போல் பாகிஸ்தானில் இருந்து போலி ஏ.ஐ வீடியோ: தமிழக சைபர் கிரைம் எச்சரிக்கை

September 2, 2026 ietamil 0

தமிழக முதல்வர் விஜய் பேசுவது போல செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட போலி ‘டீப்ஃபேக்’ (Deepfake) வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வருவதைத் தமிழக சைபர் கிரைம் சிஐடி கண்டறிந்துள்ளது. பொதுமக்களை […]

‘மதம் மாறிய பிறகு எஸ்.சி, எஸ்.டி சட்டத்தில் நடவடிக்கை எடுக்க கோர முடியாது’: ஐகோர்ட் அதிரடி உத்தரவு

September 2, 2026 ietamil 0

தேனி மாவட்டம் பெரியகுளம் கள்ளிப்பட்டி தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 2019 முதல் உடற்கல்வி ஆசிரியராக பணிபுரிந்தவர் ரவிகுமார். பின்னர் வேலூர் மாவட்டம் குடியாத்தம் பள்ளிக்கு இடமாறுதல் செய்யப்பட்டார். இந்நிலையில், கள்ளிப்பட்டி பள்ளி முதல்வர் […]

ராமர் கோவில் அறக்கட்டளையின் முதல் சி.இ.ஓ-வாக முன்னாள் ஏர் மார்ஷல் நியமனம்; யார் இந்த ஜிதேந்திர மிஸ்ரா?

September 2, 2026 ietamil 0

எழுதியவர்: மெளல்ஸ்ரீ சேத் ராம ஜென்மபூமி தீர்த்த கோயில், ஓய்வுபெற்ற ஏர் மார்ஷல் ஜிதேந்திர மிஸ்ராவை அறக்கட்டளையின் முதல் முதன்மை செயல் அதிகாரியாக (சி.இ.ஓ) நியமித்துள்ளது. காணிக்கை திருடப்பட்டதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, அறக்கட்டளையின் […]

எச்சரிக்கையுடன் செயல்படும் பா.ஜ.க? சமீபத்திய அரசியல் மாற்றங்கள் உணர்த்துவது என்ன?

September 2, 2026 ietamil 0

எழுதியவர்: லிஸ் மேத்யூ பொதுமக்களின் அழுத்தத்தால் 12 ஆண்டுகளில் முதன்முறையாக ஒரு மத்திய அமைச்சர் ராஜினாமா செய்யக் காரணமான ஜூலை மாத ஜந்தர் மந்தர் போராட்டத்திற்குப் பிறகு, பா.ஜ.க தான் இதுவரை இல்லாத அளவுக்கு […]

பழவேற்காடு, திருவள்ளூர் மாவட்ட மீனவர்களுக்கு முக்கிய எச்சரிக்கை: கடலுக்குச் செல்ல இடைக் காலத் தடை

September 2, 2026 ietamil 0

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள விண்வெளி மையத்திலிருந்து ஜி.எஸ்.எல்.வி-F17 ராக்கெட் விண்ணில் ஏவப்பட உள்ளது. இதன் காரணமாக, பழவேற்காடு மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என மீன்வளம் மற்றும் […]

மேகதாது அணைக்கு மத்திய அரசு அனுமதி தரக் கூடாது: புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி வலியுறுத்தல்

September 2, 2026 ietamil 0

புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் வி. நாராயணசாமி, எல்லை அம்மன் கோவில் வீதியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு அடிப்படையிலும், காவிரி நதிநீர் பங்கீட்டு அடிப்படையிலும் கர்நாடக அரசு தொடர்ந்து […]

வரலாற்றுப் பக்கத்தில் தவெக எம்.எல்.ஏ சத்யபாமா: பேரவைத் தலைவர் நாற்காலியில் அமர்ந்த முதல் பெண்

September 2, 2026 ietamil 0

தமிழ்நாடு சட்டப்பேரவையின் வரலாற்றுச் சுவடுகளில் ஒரு புதிய மைல்கல்லாக, பேரவைத் தலைவரின் இருக்கையில் பெண் ஒருவர் அமர்ந்து அவையை வெற்றிகரமாக வழிநடத்தியுள்ளார். திருப்பூர் வடக்கு தொகுதி தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) சட்டமன்ற உறுப்பினரான […]

திருப்பதி தேவஸ்தான துணை நிர்வாக அதிகாரி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை; திருமலை முகாம் அலுவலகத்தில் கண்காணிப்பு

September 2, 2026 ietamil 0

ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஸ்ரீ வெங்கடேசப் பெருமாள் கோவிலின் துணை நிர்வாக அதிகாரியான மெண்டு லோகநாதம் வீட்டில், ஆந்திர மாநில லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் இன்று (02.09.2026) காலை முதல் […]

காவிரி டெல்டா மரபை மீறி 45 நாட்கள் தண்ணீர் திறப்பு: அறிவிப்பை திரும்ப பெற பி.ஆர். பாண்டியன் வலியுறுத்தல்

September 2, 2026 ietamil 0

திருவாரூரில் தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் மாநில, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் அவசரக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு புதுச்சேரி மாநிலத் தலைவர் பொன் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் பி.ஆர். பாண்டியன் இக்கூட்டத்தில் பங்கேற்ற […]

போக்குவரத்து ஓய்வூதியதாரர்களுக்கு குட்நியூஸ்: ரூ.3,637 கோடி டி.ஏ. நிலுவைத்தொகை; 49 தவணைகளில் வழங்க அரசாணை

September 2, 2026 ietamil 0

தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படாமல் இருந்த ரூ.3,637 கோடி அகவிலைப்படி (டி.ஏ.) நிலுவைத் தொகையை 49 மாத தவணைகளில் வழங்கி தீர்க்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. […]

பழங்குடியின மாணவிகளை அரசுப் பேருந்தில் ஏற்ற மறுப்பு: ஓட்டுநர், நடத்துநர் சஸ்பெண்ட்

September 2, 2026 ietamil 0

புதுக்கோட்டை மாவட்டம் ரெங்கம்மாள் சத்திரத்தில் அரசு நகரப் பேருந்தில் பள்ளிக்குச் சென்ற 11 பழங்குடியின மாணவிகள் கீழே தள்ளப்பட்டதில் 8 மாணவிகளுக்கு கடும் காயம் ஏற்பட்டதால் அப்பகுதி பொதுமக்கள் திருச்சி புதுக்கோட்டை சாலையில் சாலை […]

‘ஜெயிலர் 2’க்கு வந்த சிக்கல்… விஜய் வசனத்தால் ரிலீஸ் தேதி மாறுமா?

September 2, 2026 ietamil 0

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் கடந்த 2023ஆம் ஆண்டு வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான இப்படம் உலகளவில் […]

15 லட்சம் சதுர அடியில் மெகா ஷாப்பிங்; சென்னையில் ஆகப் பெரிய புதிய ரீடைல் ஸ்டோர்; இடத்தை முடிவு செய்த லெஜன்ட் சரவணா

September 2, 2026 ietamil 0

சென்னை ரேடியல் ரோட்டில் சுமார் 15 லட்சம் சதுர அடியில் தனது பிரம்மாண்டமான புதிய கிளை ஒன்றை அமைக்க தி நியூ சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. தொழிலதிபர் சரவணன் அருள் தலைமையிலான லெஜண்ட் […]

Chennai News Live Updates: எல்லாவற்றையும் குறை சொல்ல பிறந்தவர் சீமான்

September 2, 2026 ietamil 0

Chennai News Live Updates: பெட்ரோல் மற்றும் டீசல் விலை இன்று (2.9.2026, புதன்கிழமை) சென்னையில் ஒரு  லிட்டர் பெட்ரோல் ரூ.107.77-க்கும் டீசல் ரூ.99.55-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இயற்கை எரிவாயு (CNG) ஒரு கிலோ […]

‘6 மாதம் ஆச்சு; நோ பீரியட்ஸ், நோ ப்ரக்னன்சி, நோ மெனோபாஸ்… இந்த அனுபவம் கற்றுத் தந்த பாடம்’: நடிகை ஃபரினா

September 2, 2026 ietamil 0

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பாரதி கண்ணமா சீரியலில் வில்லியாக நடித்து பரவலாக கவனம் ஈர்த்தவர் நடிகை ஃபரினா ஆஸாத். பாரதி கண்ணமா 2 -ஆம் பாகத்திலும் இவர் நடித்தார். ஆனால், இந்த தொடர் மக்களிடம் […]

5 நாள் வேலை கோரிக்கை நிலுவை: செப்டம்பர் 11 முதல் நாடு தழுவிய வங்கி வேலை நிறுத்தம்; அக். 26 முதல் காலவரையற்ற போராட்டம் என எச்சரிக்கை

September 2, 2026 ietamil 0

வாரத்தில் 5 நாட்கள் வேலை திட்டம் மற்றும் செயல்திறன் அடிப்படையிலான ஊக்கத் தொகை (PLI) திட்டத்தில் மாற்றம் உள்ளிட்ட 4 முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் தொடர் வேலைநிறுத்தப் போராட்டம் செய்யப்போவதாக வங்கி […]